தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; வெளியான சிசிடிவி காட்சிகள்.. என்ஐஏ விசாரணை! - bengaluru

Karnataka blast: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் இன்று (மார்ச் 1) நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

blast-at-bengaluru-rameswaram-cafe
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: என்ஐஏ, எஃப்எஸ்எல், வெடிகுண்டு செயலிழப்பு படை விசாரணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:21 PM IST

Updated : Mar 1, 2024, 6:38 PM IST

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு: பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவுக் கடையில், இன்று மர்மமான முறையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாவட்ட மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து என்ஐஏ, எஃப்எஸ்எல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை நேரில் பார்த்த எடிசன் என்பவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "ராமேஸ்வரம் கஃபே உணவுக் கடையின் அருகே உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறோம். இன்று மதியம் இங்கு உணவு சாப்பிட வந்தோம். அப்போது கடையில் குறைந்தது 30க்கு மேற்பட்ட நபர்கள் இருந்து இருப்பார்கள். சரியாக 1.05 மணிக்கு கடையின் உள்ளே இருந்து பலத்த சத்தம் கேட்டது. அனைவரும் கடையை விட்டு ஓடத் தொடங்கினர். கடை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள், அப்பகுதியிலுள்ள மக்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தனது X வலைத்தளத்தில், "ராமேஸ்வரம் கஃபே நிறுவனத் தலைவர் ஸ்ரீ நாகராஜிடம் குண்டு வெடிப்பு குறித்து கேட்டபோது, அவர் உணவகத்தில் உள்ள சிலிண்டர் எதுவும் வெடிக்கவில்லை எனவும், கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையிலிருந்துதான் குண்டு வெடித்தாக தெரிவித்தார். இதன் மூலம் இது குண்டு வெடிப்புச் சம்பவம் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, இதற்கு முறையான பதிலை கர்நாடக முதல்வர் சித்தராமையா கூற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தரையிறங்க முடியாமல் தவிப்பு: சாதுரியமாக செயல்பட்ட விமானி! திக்.. திக்.. நிமிடங்கள்!

Last Updated : Mar 1, 2024, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details