டெல்லி : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதன்படி பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியிலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மேலும் 34 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மக்களவை சபாநாயகருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட மறுவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், சிவராஜ் சிங் சவுகான் விதிஷா, ஸ்மிரிதி இராணி மீண்டும் அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். நிதின் கட்காரி நாக்பூரிலும், கிரண் ரிஜிஜூ அருணாசல பிரதேசத்திலும் போடியிடுகின்றனர். மொத்தம் 34 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள், மற்றும் 28 பெண் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.