சத்தீஸ்கர்: விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் உயர் நீதிமன்றம் “ஒரே கூரையின் கீழ் கணவர் மனைவி ஒன்றாக வாழ்ந்தாலும், உரிய காரணமின்றி மனைவி தனி அறையில் வசிப்பது கணவருக்கு மன வேதனையை அளிக்கும்” என தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக கணவர், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்த நிலையில், கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கில், விவாகரத்து வழங்கி பிலாஸ்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கணவர் தாக்கல் செய்த மனுவில், மனைவி தன்னிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். நாளுக்கு நாள் தம்பதியின் சண்டை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், குடும்பத்தினர் சண்டையை தீர்க்க முற்பட்டனர்.
எனது மனைவியின் பிடிவாதத்தால் தீர்வு எட்டப்படவில்லை. இருவரும் தனித்தனி அறைகளில் தனித்தனியாக வாழத் தொடங்கினோம். எனது வாழ்நாள் முழுவதையும் இப்படியே கழிக்க விருப்பமில்லை. எனவே, இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13-ன் கீழ் விவாகரத்து பெற” வழக்கு தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.