பாட்னா : பீகார் மாநிலம் புன்புன் பகுதியை சேர்ந்தவர் சவுரப் குமார். முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், பாட்னா அடுத்த பதியகோல் பகுதியில் நடந்த திருமண விருந்தில் கலந்து விட்டு சவுரப் குமார் தன் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனங்களில் சவுரப் குமாரை பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீர் துப்பாக்கிச் சூடு தக்குதல் நடத்தி உள்ளது. இதில் சவுரப் குமார் மீது 5 குண்டுகள் பாயந்து சாலையிலேயே சரிந்து விழுந்தார். உடன் வந்த அவரது முன்முனுக்கு 3 குண்டுகள் உடலில் பாய்ந்தன.
உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதில் சவுரப் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். அநேரம் முன்முன் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.