கோடா: ஜார்கண்ட் மாநிலம், கோடா மாவட்டத்தில் உள்ள சத்திரம் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியின் நூலகத்தில் நேற்று(ஜன.30) காலை ஆசிரியர்களிடையே ஏற்பட்ட மும்முனைக் காதல் விவகாரத்தில் ஆண் ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். துப்பாக்கிச் சுடு சத்தம் கேட்டு பள்ளியின் முன் ஏராளாமான மக்கள் திரண்டனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து போடையாஹட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத் தகவலறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்நிலைய பொறுப்பாளர் தாராசந்த் தலைமையில் போலீசார் பள்ளி நூலகத்தின் பூட்டை உடைத்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஆசிரியரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பள்ளி கொடுத்த தகவலின் படி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ரவி ரஞ்சன் எனவும், இறந்த ஆசிரியர்கள் ஆதர்ஷ் சிங் மற்றும் ஒரு பெண் ஆசிரியை என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட ஆசிரியர் போடையாஹட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இறந்த ஆசிரியர் ஆதர்ஷ் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், இறந்த பெண் ஆசிரியை போடையாஹட் பகுதியில் வசிப்பவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:'சிறையிலிருந்தே கரூரை கைக்குள் வைத்துள்ள செந்தில் பாலாஜி' - முகிலன் பரபரப்பு பேச்சு