டெல்லி: டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் டெல்லி விமான (Indira Gandhi International Airport) நிலையத்தின் டி-1 டெர்மினல் ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மேற்கூரையில் இருந்த ராட்சத கம்பி சரிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார்களின் மீது விழுந்தது. இதனால், அங்கிருந்த கார்கள் அப்பளம் போல் நொறுங்கின.
இது தொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.