கர்நாடகா: பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஹுஸ்கூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும், மதுரம்மா தேவி கோயில் திருவிழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 150 அடி தேர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் கிராமத்தில் உள்ள சாலையில் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
பெங்களூருவில் 150 அடி தேர் சாய்ந்து பயங்கர விபத்து! - Bangalore Chariot accident - BANGALORE CHARIOT ACCIDENT
Bangalore Chariot accident: பெங்களூரு புறநகர்ப் பகுதியில் இன்று நடைபெற்ற மதுரம்மா தேவி கோயில் தேர்த் திருவிழாவில் 150 அடி தேர் சாலையில் சென்ற போது சாய்ந்து நொறுங்கியுள்ளது.
பெங்களூருவில் 150 அடி தேர் சாய்ந்து பயங்கர விபத்து
Published : Apr 6, 2024, 6:46 PM IST
அப்போது திடீரென்று தேர் ஒரு புறம் சாய்வதைக் கண்ட பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓட துவங்கினர். பின்னர் தேர் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் உயிர்ச் சேதம் தப்பியது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதி நடைபெறுகிறது" - சோனியா காந்தி குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024