ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பியாட்கி தாலுகாவில் உள்ள குண்டேனஹள்ளி கிராஸில் இன்று (ஜூன் 28) அதிகாலை 4 மணியளவில் முன்னே சென்ற லாரியின் பின்பகுதியில் சுற்றுலா வேன் ஒன்று அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு சிறுவன் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்த அனைவரும் கர்நாடக மாநிலம் ஷிவமொகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்டத் தகவல் தெரியவந்துள்ளது.