வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கிவிழுந்த வேட்பாளரின் கணவர் - தேர்தல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14539491-thumbnail-3x2-hus.jpg)
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளுக்கான வாக்கு எண்ணும் பணி சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் 24ஆவது வார்டில் திமுக சார்பில் ஜெயலதா என்கிற பெண்மணி போட்டியிட்டார். இந்நிலையில் அந்த வார்டிற்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்றபோது ஜெயலதாவின் கணவர் ஆறுமுகம் திடீரென மயங்கி கீழே சரிந்தார். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST