உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி பேரணி - Integrated Child Development Project
🎬 Watch Now: Feature Video
புலியகுளம் பகுதியில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சிங்காநல்லூர் பகுதி சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணியில் குழந்தைக்கு இயற்கை தந்த அற்புத வரம் தாய்ப்பால், போஷன் அபியான் திட்ட வாசகங்கள், தாயும் சேயும் நலம் பெற கொடுப்பீர் தாய்ப்பால், தாய்ப்பால் தொடர்ந்து தருவதால் புற்றுநோயும் வராதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கலந்துகொண்டனர்.
Last Updated : Aug 12, 2022, 8:29 PM IST