2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வயலூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம்! - vaikasi visakam 2022

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 12, 2022, 8:47 PM IST

திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான திருச்சி வயலூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் பூக்களாலும், வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். 'அரோகரா அரோகரா' என்ற பக்தி முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கரோனா காரணமாக 2 ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு வெகுசிறப்பாக நடைபெற்றது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.