விழுப்புரத்தில் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபரால் பரபரப்பு! - set fire to government officer vehicle
🎬 Watch Now: Feature Video

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியராக இருப்பவர் கார்த்திக். இன்று இவரது வாகனம் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள், தீ வைத்த நபரை பிடித்து விசாரித்ததில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ரஞ்சித் என்பது தெரியவந்தது.