'எங்களுக்கு ஓட்டுப்போடுங்க பட்டா தர்றோம்னு சொன்னாங்க... இப்போ, எங்களை துன்புறுத்திட்டாங்க..' - அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு
🎬 Watch Now: Feature Video

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் சுமார் 259 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் இருக்கும் நிலம் அரசுக்குச் சொந்தமானது என உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர்களுக்கு வேறு இடத்தில் வீடு வழங்கப்படும் என நோட்டீஸ் வழங்கிய நிலையில், இன்று காலை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் வீட்டை இடிக்க முயன்றனர். ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.