தபால் நிலையத்தில் புகுந்த நாகப்பாம்பு:லாவகமாகப் பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்! - king cobra
🎬 Watch Now: Feature Video
ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலை உச்சியில் பேருந்து நிறுத்தம் அருகே தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(ஜூன்03) வழக்கம்போல் தபால் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த ஊழியர்கள் தபால் நிலையத்தை திறந்து பார்த்தபோது, அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தபால் அலுவலகத்திலிருந்த நாகப்பாம்பு அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் உள்ளேயே பதுங்கியதால், அச்சமடைந்த தபால் ஊழியர்கள் உடனடியாக ஆசனூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தபால் அலுவலகத்திற்குள் பதுங்கிய நாகப்பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.