இலங்கை திருக்கேதீச்சர பெருமான் திருக்கோவில் குடமுழுக்கு விழா - srilanka thirkedichara peruman temple festival
🎬 Watch Now: Feature Video
சிவபெருமான் புவனபதியாக எழுந்தருளியுள்ள உத்தர கைலாயத்திற்கு நிகராக விளங்கும் தட்சிண கைலாயங்கள் என்று அழைக்கப்படுவது திருச்சி திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் ஆகிய முப்பெரும் தலங்களாகும். இதில், கௌரியம்மை சமேத திருகேதீச்சரபெருமான் திருக்கோயில் இலங்கை மன்னார் பகுதியில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோயில் ஈழத்தமிழர்களின் முயற்சியால் கருங்கல் திருப்பணியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த 3-ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா இன்று(ஜூலை06) காலை நடைபெற்றது. இதில், ஈழத்தமிழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.