6000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறும் எரிமலை!
🎬 Watch Now: Feature Video
ரெய்காவிக்: ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 6,000 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த எரிமலை தற்போது வெடித்து சிதறியுள்ளது. கடந்த மூன்று வார காலங்களில், 50,000 முறைக்கு மேலாக நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக மாரச் 19ஆம் தேதி எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் 8 கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து சென்று எரிமலையை பார்த்தனர். ஆனால், வானிலை மோசமானதால் அவர்களால் தங்களின் இருப்பிடத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே, அவர்களை மீட்க நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, எரிமலை பகுதிக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.