பெரியகுளம் வராக நதியில் மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்த மக்கள் - Varaha river
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள பெரியகோயில் எனப்படும் பாலசுப்பிரமணியன் சுவாமி கோயிலில் உள்ள ஆண், பெண் மருத மரங்களுக்கு இடையே வராக நதி ஓடுகிறது. இன்று புரட்டாசி மகாளய அமாவாசையை ஒட்டி, தேனி உள்பட அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் மறைந்த தங்களது குடும்பத்தினருக்கு வராக நதிக்கரையின் அருகே திதி கொடுத்தனர்.