அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் தடை: போக்குவரத்து நெரிச்சலின்றி ஆசனூர் மலைப்பாதை - A ride on Asanur Hill with nature without traffics
🎬 Watch Now: Feature Video
ஈரோடு:தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம்-ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனப்போக்குவரத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்ததைத் தொடர்ந்து, 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றும் லாரிகளுக்கு அவ்வழியாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 4,000 லிருந்து 2,000 ஆக குறைந்தது. எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலை இயற்கை சூழலுடன் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் யானைகள், புள்ளி மான்கள் சாலையோரம் சுற்றித்திரிகின்றன. பறவைகளின் இனிமையான பாட்டை கேட்டு ரசித்தபடி வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.