ஆந்திராவில் கரை ஒதுங்கிய தங்க நிறத்தேர்! - ஆசானி புயலின் நடுவே கடலைக் கடந்து வந்த மர்மமான தங்கத் தேர்
🎬 Watch Now: Feature Video

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் உள்ள சுன்னப்பள்ளி கடற்கரையில் மர்மமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (மே 11) ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் கடற்கரையில் தங்கமுலாம் பூசப்பட்ட மியான்மர் அல்லது தாய்லாந்து நாட்டில் உள்ள வழிப்பாட்டுத் தளத்தின் வடிவமைப்பைப் பெற்ற தேர் ஒன்று கரை ஒதுங்கியதை அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இது எந்த நாட்டிலிருந்து வந்திருக்கும்? என்ற கோணத்தில் மரைன் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
அசானி புயல்