மனோகரா வாஸ்ட்ராட் வீடு: இந்த வீட்டிற்கு வயது 200. - கர்நாடக கடக்
🎬 Watch Now: Feature Video
எலிவளையானாலும் தனிவளையாக வேண்டும் என்றொரு சொலவடையுண்டு. எல்லோருக்கும் ஒரு வீடு கட்டிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவில் பல தசாப்தங்களைக் கழிக்கும் கூட்டங்களே நம்மில் அதிகம். கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் ஷிரோலா கிராமத்தில் உள்ள மனோகரா வாஸ்ட்ராட் வீடு கொஞ்சம் வித்தியாசமானது. 200 விட்டங்களும் 20 அறைகள், 15க்கும் மேற்பட்ட கதவுகள், 20 நெடுவரிசைகள் கொண்ட இந்த வீட்டின் வயது கிட்டத்தட்ட 200. நான்காவது தலைமுறையினர் தற்போது இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு குளிர் காலத்தில் கதகதப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். அதற்கு காரணம் அந்த கால தொழில் நுட்பமும், மண்ணால் ஆன கூரையும் தான்.காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த வீடு 50 கூட்டுக்குடும்பங்களை தன்னுள் கொண்டுள்ளது.