தாத்தையங்கார்பேட்டையில் குளுமை பூஜை விழா - செங்குந்தர் மாரியம்மன் பரிபாலன கமிட்டி
🎬 Watch Now: Feature Video

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையில் செங்குங்தர் மாரியம்மன் கோயிலில் குளுமைபூஜை விழா இன்று (மே 09) நடைபெற்றது. அப்போது மாரியம்மன், வீரமலையாண்டி, உக்ராண்டி, சடாமுனி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகளிலிருந்து பொதுமக்கள் விடுபடவும், பள்ளிக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் மேம்படவும், சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன. விழாக்குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செங்குந்தர் மாரியம்மன் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தாத்தையங்கார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.