Video: கலியுக வரதராஜப்பெருமாள் கோயில் தேரோட்டம்..! - தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று காலை (ஏப். 18) தேரோட்டம் நடைபெற்றது. முதல் தேரில் ஆஞ்சநேய சுவாமி முன்செல்ல, பெரியத்தேரில் வரதராஜப்பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றுகூறி தேரை வடம்பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர்.