விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு - இப்தார் நோன்பு
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் பூந்தமல்லி ஒன்றிய நகர கோரிமேடு கிளை சார்பாக வெள்ளிக்கிழமை (ஏப்.29) பூந்தமல்லியில் இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பூந்தமல்லி தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளபதி விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சார்பாக இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
Last Updated : May 1, 2022, 9:05 AM IST