Video: நீலகிரி மாயாற்றில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்; பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை! - நீலகிரி மாயாற்றில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: தமிழ்நாட்டில் சில தினங்களாக கன மழை பெய்வதால், தெங்குமரஹாடா வனத்தில் பெய்த மழையால் பல்வேறு அருவிகளில் கொட்டிய மழை நீர் மாயாற்றில் கலந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. செந்நிறந்தில் பாய்ந்தோடும் மாயாற்றில் மரம், செடி, கொடிகள் அடித்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் அப்பகுதிகளில் விளையும் வாழை, மிளகாய், கத்திரி போன்ற விளைப் பொருள்களை மாயாற்றைக் கடந்து பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்லமுடியாமல் அப்பகுதி விவசாயிகள் முடங்கியுள்ளனர். மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.