மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Flood alert for people along banks of Cauvery
🎬 Watch Now: Feature Video
சேலம்: மேட்டூர் அணைக்கு காவிரியில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டோரா, ஒலிப்பெருக்கி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாளை (ஆக.03) ஆடிப்பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொது மக்கள் புனித நீராட வேண்டும். மற்ற பகுதிகளில் நீராட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.