மல்லுக்கட்டான துவாக்குடி ஜல்லிக்கட்டு போட்டி - மல்லுக்கட்டான ஜல்லிக்கட்டு போட்டி
🎬 Watch Now: Feature Video

திருச்சி: திருவெறும்பூர் அருகே துவாக்குடி அங்காளம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்டப் பல மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், கட்டுக்கு அடங்காத காளைகளுக்கும் வெள்ளி காசு, ரொக்கம், ட்ரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டப் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனிடையே தரமில்லாத பரிசுப்பொருட்கள் வழங்கியதாக காளையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது விழா கமிட்டியினருக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாடிவாசல் களத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Last Updated : May 25, 2022, 5:19 PM IST
TAGGED:
Jallikattu Festival