காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ எடையுள்ள கோலா மீன்கள்! - மீனவர் வலையில் சிக்கிய கோலா மீன்கள்
🎬 Watch Now: Feature Video
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமான ஐஎஸ்வி சுறா என்ற பெயருடைய விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த மாத இறுதியில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 15 நாள்கள் மீன் பிடித்துவிட்டு இன்று(ஜனவரி 13) காலை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பினர். அப்போது மீன் வகைகளைப் பிரித்துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதில் சுமார் 1000 கிலோ எடையுள்ள கோலா வகையைச் சேர்ந்த மூன்று மீன்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் கோலா வகை மீனை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.