Video... அசுரவேகத்தில் டோல்கேட்டின்மீது மோதிய தனியார் பேருந்து... - சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா(தாவங்கரே): ஜகளூர் தாலுகா, கனனகட்டே கிராமம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் சுங்கவரி வசூலிக்கும் அறை ஒன்றின்மீது அசுரவேகத்தில் வந்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து நொறுங்கியதுடன் பயணிகள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அறைக்குள் இருந்த ஊழியரும் எந்த காயங்களும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.