15 அடி கிணற்றில் விழுந்த காளை! - Tirupattue
🎬 Watch Now: Feature Video
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் இன்று(ஏப்.30) காலை நடைபெற்ற எருது விடும் விழாவில், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருக்குச் சொந்தமான காளை, விழாவில் பங்கேற்று ஓடிய நிலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத 15 அடி கிணற்றில் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தது. உடனடியாக மாட்டின் உரிமையாளர் காளையை மீட்க நீண்ட நேரம் போராடிய நிலையில், ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காளையை கயிறு கட்டி நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறு காயங்களுடன் உயிருடன் மீட்டனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.