ஆம்பூரில் எருது விடும் விழா - Ambur
🎬 Watch Now: Feature Video
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் இன்று(ஏப்.30) மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆகிய பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் முதல் பரிசாக காளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் என 40க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.