1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு! - vellore latest news
🎬 Watch Now: Feature Video

வேலூர்: அடுத்த அமிர்தி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வேலூர் மண்டல கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே பாதுகாப்புப்படை அடங்கிய குழு அமிர்தி வனசரகம், தொங்கு மலை, தேக்கு மரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சாராய சோதனையித் ஈடுபட்டனர். அப்போது, தேக்கு மரத்தூர் மலை கிராமத்தில் உள்ள தேக்குமர ஓடை அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச சிண்டக்ஸ் டேங்கில் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் கொட்டி அழித்தனர்.