தென் காளகஸ்தி.. பாம்புரநாதர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா... - சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரநாதர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா
🎬 Watch Now: Feature Video
நவக்கிரகங்களில் சர்வ கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு, கேது கிரகங்கள் ஒரே சாரீரமாகச் சேர்ந்து மார்பில் சிவலிங்கம் தாங்கியபடி எழுந்தருளியுள்ள, தென் காளகஸ்தி என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருப்பாம்புரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரநாதர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா நேற்று மாலை 3.13 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி ராகு கேது பகவானுக்கு அரிசிமாவு, திரவியம், மஞ்சள், சர்க்கரை, பால் போன்ற திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அதனைத்தொடர்ந்து ராகு கேது பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
தென் காளகஸ்தி சேஷபுரீஸ்வரர்