பன்றிகள் வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞர் தீக்குளிக்க முயற்சி - etv bharat
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மாநகராட்சிப் பகுதியில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பலர் சர்வசாதாரணமாக பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இதனால் நோய்வாய்ப்பட்டு பலர் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வேடப்பட்டியைச் சேர்ந்த ரகுவரன் (27) எனும் நபர், இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென தீக்குளிக்க முயற்சித்தார். தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.