எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வானதி சீனிவாசன் - கோவை தெற்கு தொகுதி
🎬 Watch Now: Feature Video
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச் 17) காலை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கெம்பட்டி காலனி பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக ரஜினி மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில மாற்று கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.