பயிர்க்கடன் தள்ளுபடி - திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! - பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் 12.110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து இன்று (பிப்.5) அறிவித்தார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற 89 ஆயிரத்து 860 விவசாயிகளின் மொத்த பயிர்க்கடன் 639.80 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜன் விவசாயிகளுடன் திருவண்ணாமலை போளூர் சாலையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.