எம்ஜிஆர் பாடலுக்கு கலைநயத்துடன் நடனம் ஆடிய 70வயது முதியவர் - MGR birthday
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10276444-thumbnail-3x2-krr.jpg)
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே ஸ்பீக்கர்களில் ஒலிக்கும் எம்ஜிஆரின் பாடல்களுக்கு கலைநயத்துடன் முதியவர் ஒருவர் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடனமாடி, சாலையில் கடக்கும் பொதுமக்களை மகிழ்வித்தார். 70 வயது நிரம்பிய எம்.ஜி.ரெட் என அழைக்கப்படும் அந்த முதியவர், காமராஜ் மார்க்கெட் அருகே அமைந்துள்ள வாழைக்காய் மண்டியில் கூலிவேலை செய்து வருகிறார்.