300 ஆண்டுகள் பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது! - ஆலமரம் முறிந்து விழும் காட்சி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9652696-thumbnail-3x2-ala-tree.jpg)
பெரம்பலூர் மாவட்டம் தெற்கு மாதவி கிராமத்தில் உள்ள குடிநீர் ஏரியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. ஒரு ஏக்கர் சுற்றளவு கொண்ட இந்த மரத்தில் ஏராளமான பறவைகள், குரங்குகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக ஆலமரத்தின் ஒரு பகுதி முறிந்து கிழே விழந்தது. இதனை அப்பகுதி இளைஞர்கள் தங்களது செல்போனில் படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். தற்போது ஆலமரம் முறிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.