தஞ்சை அருகே மக்களுக்காக சேவையாற்றும் 20 ரூபாய் டாக்டர்! - tanjore special doctor
🎬 Watch Now: Feature Video
தஞ்சை மாவட்டம் பூதலூர் பேருந்து நிறுத்தம் அருகே அடையாளப் பலகை கூட இல்லாத கட்டடத்தில் எளிமையாக அமர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் டாக்டர் கிருஷ்ணன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முதல் பட்டதாரியான இவர், வேலைக்காக எங்கும் சொல்லாமல் 1978ஆம் ஆண்டு தனது மருத்துவ சேவையை பொதுமக்களுக்காகத் தொடங்கினார். 41 ஆண்டுகளுக்கு முன் மூன்று ரூபாயில் தொடங்கிய அவரது சேவை, இன்று 20 ரூபாய்க்கு நீடித்து வருகிறது. 71 வயதாகும் இந்த மருத்துவர் கிருஷ்ணனிடம் தான் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் மருத்துவத்தை பார்த்துச் செல்கின்றனர்.