Poonamallee Floods: மழை நின்றும் வடியாத வெள்ள நீர்: கல்விக்கூடங்கள் செல்லமுடியாத மாணவர்கள் - சென்னை வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நசரத்பேட்டை யமுனாநகர் பகுதியில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் தேங்கிய நீர் இன்னும் வடியாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இடுப்பளவிற்கு நீர் தேங்கியுள்ளதால், நாளை (நவ.22) பள்ளி, கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் மாணவர்கள் அங்கு செல்ல முடியாத அவலநிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள நீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.