அரியலூரில் இடியுடன் கூடிய மழை - தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை
🎬 Watch Now: Feature Video
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வரும் நிலையில், நேற்று (ஆக. 8) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதையடுத்து இரவு மூன்று மணி நேரத்துக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், அரியலூர், திருமானூர், செந்துறை, உடையார்பாளையம், கீழப்பழுவூர், வி.கைகாட்டி, ராயம்புரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.