பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நூதன முறையில் போராட்டம் - mayiladuthurai tharangambadi public protest against petrol diesel rate
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12267707-thumbnail-3x2-myd.jpg)
மயிலாடுதுறை: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு மேல் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இதனைக் கண்டிக்கும்விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பனங்காய் வண்டி, நடைவண்டிகளை ஓட்டிக்கொண்டு இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது ஒன்றியத் தலைவர் மணிவண்ணன் தலைமையில், ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்றது.