குடிநீர் குழாயில் உடைப்பு... அலட்சியம் காட்டும் அலுவலர்கள்! - drinking water pipe
🎬 Watch Now: Feature Video
வேலூர்: புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடிநீர் நீரேற்றும் நிலையக் குடிநீர் குழாயில் நேற்றிரவு (மே. 22) திடீரென உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகிவருகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் வீணாகுவதைத் தடுத்து நிறுத்தாத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.