புத்தாண்டு கொண்டாட்டம்: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும்விதமாக இன்று (ஜன. 01) சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உதகை படகு இல்லத்தில் குவிந்தனர். இதனால், மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி, மோட்டார் படகு சவாரி முழுவதுமாக இயக்கப்பட்டுவருகின்றன. அவற்றில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு பயணித்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கும்விதமாக ஏரியில் புதிதாகச் செயற்கை நீரூற்றும் பொருத்தப்பட்டுள்ளது.