பட்டுக்கோட்டை: 5 ரூபாய்க்கு வடை, பாயாசத்துடன் தரமான மதிய உணவு - தரமான மதிய உணவு
🎬 Watch Now: Feature Video

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் உணவகம் நடத்தி வருகிறார் இளைஞர் சிவா. இவர் இன்று (மே.27) முதல் ஐந்து ரூபாய்க்கு தரமான அரிசியில் செய்த சாதம், எதிர்ப்பு சக்தி மிகுந்த காய்கறிகளுடன் மதிய உணவு வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர் தொடங்கி வைத்தார். மேலும், இன்று பௌர்ணமி என்பதால் வடை, பாயாசத்துடன் சேர்த்து மதிய உணவை வழங்கினார். கடந்த ஐந்து நாள்களாக காலை உணவாக இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவை பொதுமக்களுக்கு இவர் இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.