ஓணத்தால் நேந்திர வாழைத்தார்களுக்கு மவுசு!!
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நேந்திர ரக வாழைத்தார்களின் தேவை அதிகரித்துள்ளது. கேரளாவில் நேந்திர ரக வாழைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் அதிக அளவில் விற்பனையாகும் தின்பண்டமாக உள்ளதால் தற்போது அந்த வாழைத்தார்களை அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
மேலும், வியாபாரிகள் நேரடியாக விவசாய தோட்டங்களுக்கு சென்று விலை பேசி கொள்முதல் செய்கின்றனர். தற்போது காய்களின் தரத்திற்கேற்ப கிலோ ரூ.35 முதல் ரூ.43 வரை விற்பனையாகிறது. மேலும், நேந்திர ரக வாழைத்தார்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.