மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்! - திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. விழாவில், அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி ஆகிய ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எடுத்து வரப்பட்டு காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.