குறைந்த விலையில் தானியங்கி சானிடைசர் கருவியை உருவாக்கி கல்லூரி மாணவர் சாதனை! - Automatic sanitizer tool
🎬 Watch Now: Feature Video

கோயம்புத்தூர் மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் பரத் குமார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரானிக் படித்து வருகிறார். கரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தான் பயின்று வரும் எலக்ட்ரானிக் துறை தொடர்பாக ஏதாவது ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். மேலும் தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய தானியங்கி சானிடைசர் கருவியை தயாரிக்க முடிவு செய்து மற்ற கருவிகளை காட்டிலும் 50 சதவீதம் குறைந்த விலையில் உருவாக்கியுள்ளார்.
Last Updated : Dec 22, 2020, 10:45 PM IST