வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வாகன சேவை தொடக்கம்! - வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக எல்இடி திரையுடன் கூடிய வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கிவைத்தார். வாகனத்தின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில், வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை, வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் காணொலியாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது.