கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மரங்கொத்தி பறவைகள்! - தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு குளு குளு காலநிலையை தொடர்ந்து வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளன. இக்காலத்தில் பெய்த மழையால், இயற்கை செழுமை பெற்று கொடைக்கான பசுமையாகவும், சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் காட்சியளிக்கிறது.
இச்சூழலில் வெளிநாட்டு மரங்கொத்திப் பறவைகள் புல்வெளிகள், நீர் நிலைகள், செடி கொடிகள் போன்ற இடங்களில் சிறகடித்து விளையாடும் காட்சி காண்போர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.