என்ன ஆனது..? தமிழின சரித்திரத்தைச் சொல்லும் கீழடி அகழாய்வு! - கழாய்வில் தமிழினம், மொழி, பண்பாடு, சமூகவியல்
🎬 Watch Now: Feature Video
கீழடி அகழ்வாராய்ச்சிப் பணி சிறப்பாக நடைபெற்று வந்த நேரத்தில், பணிகளை மேற்கொண்ட அலுவலர்களின் பணியிட மாற்றம், பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை என்ற குற்றசாட்டுகள் என பல கட்டங்களைத் தாண்டி வந்த நிலையில் கீழடி அகழாய்வுப் பணிகளிலும், மூன்று கட்ட அகழாய்விற்கான அறிக்கை தயாரிப்பிலும் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஈடுபடுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் இதை இன்னும் செயல்படுத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை தொல்லியல் அறிஞர்கள் கேள்வியெழுப்பி வரும் நிலையில், இது குறித்த செய்தித் தொகுப்பை உங்கள் பார்வைக்காக இட்டுச் செல்கிறோம்.